சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அக்.20-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தினசரி செல்லும் 2,100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 813 என மொத்தம் 2 நாட்களில் 5,664 பேருந்துகள் இயக்கபட்டன. வார விடுமுறை, ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன.
வார விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை ஒட்டி சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என அறிவிக்கபட்டிருந்தது. அது மட்டுமின்றி சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கபடும் என தெரிவிக்கபட்டிருந்தது.
அதன்படி, தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கபட்டு 20, 21, 22 ஆகிய தேதிகளில் செயல்படும் என்றும் அங்கிருந்து திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், திண்டிவனம் ஆகிய ஊர்களிக்கு செல்லும் பேருந்துள் இயக்கபடும் என்றும், பூவிருந்தவல்லியில் இருந்து வேலூர் வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கபடும் என்றும் தெரிவித்தார். மற்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்ந்து இயக்கபடும் என தெரிவிக்கபட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. சென்னையை பொறுத்த வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் 813 என மொத்தம் 2 நாட்களில் 5,664 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது. அவற்றில் 3,00,092 பேர் பயணித்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.