சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி அன்சுல் மிஸ்ரா மீது லலிதாம்பாள், விஸ்வநாதன் வழக்கு தொடர்ந்தனர். குறித்த காலத்தில் உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “3 வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிடில் மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். அரசு அதிகாரிகள் கடமை செய்யாததால் நீதிமன்றங்களை மக்கள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை
0