Saturday, March 2, 2024
Home » 8ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை: அதிகாரிகள் தகவல்

8ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை: அதிகாரிகள் தகவல்

by Ranjith

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, வரும் 8ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை மற்றும் புறநகர்களில் பணி நிமித்தமாக வந்து வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாட விரும்புவர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ரயில், பேருந்துகளின் மூலம் சொந்த ஊருக்கு செல்வர். எனவே இந்தாண்டும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டு சென்னையில் இருந்து மட்டும் 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி திங்கட்கிழமையில் வருவதால் 13ம் தேதி சனிக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக பலர் வெள்ளிக்கிழமையே சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கோள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர், ஆணையர், போக்குவரத்து கழக மேலாளர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆலோசனைக்கு பின் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் வழக்கம்போல் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து சேவை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi