அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் மாநகராட்சி 10வது மண்டலம் 127 வார்டு அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்ததால் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வந்தனர். இதனால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு கோடி 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிநடைபெற்று வருகிறது. கோயம்பேட்டில் உள்ள சென்னை மாநகராட்சி ரவுண்டு பில்டிங் அலுவலகம் மிக பழமையானது. இதனால் எந்த நிலையிலும் இடிந்து விழும் என்பதால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரவுண்டு பில்டிங் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கூறினர்.