Sunday, April 21, 2024
Home » மாமல்லபுரத்தில் இன்று மாலை ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

மாமல்லபுரத்தில் இன்று மாலை ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

by Francis

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று மாலை ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். யுனெஸ்கோ அமைப்பால் 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, பல்லவ மன்னர்கள் செதுக்கிய பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில் இன்னும் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. தற்போது, தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரேயுள்ள ஒரு குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதி பேருந்து நிலையமாக கடந்த 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு வரும் பேருந்துகள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 1992ம் ஆண்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் உள்ளது போன்று நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி, மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, 2006 முதல் 2011 வரை அப்போதைய தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நெரிசலை குறைத்து சிரமமின்றி மக்கள் வந்து செல்லும் வகையில், நவீன பேருந்து நிலைய பணிகள் மேற்கொள்ள ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித் துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கு உகந்த இடம் என சான்றிதழ் பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, மாமல்லபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தற்போது, நவீன பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலிகாத்தான் மரங்கள் உள்ளிட்ட செடி, கொடிகள் அகற்றி இடம் சமன்படுத்தப்பட்டு பல்வேறு அம்சங்களுடன் பேருந்து நிலையம் கட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று மாலை மாமல்லபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ, பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

 

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi