சென்னை: தமிழ்நாடு அனை த்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புருஷோத்தமன், ஜெ.ஜான் கென்னடி வரவேற்றனர். தரமான பொறியாளர் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் கட்டுமான பொறியாளர் கவுன்சில் அமைக்க கொள்கை அளவில்
ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டுள்ள முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்கர் எ.வ.வேலுவுக்கு நன்றி தெரிவிப்பது, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பொறியாளர் கவுன்சிலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அரசு சங்க விதிகளின்படி சொசைட்டி நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், முன்னாள் தலைவர்ராதாகிருஷ்ணன், தி.மு.க பொறியாளரணி மாநில செயலாளர் எஸ்.கே.பி.கருணா, எம்.திருசங்கு, பி.பழனிவேல், பி.வி.ரமணா, எஸ்.யுவராஜ், வி.சுதர்சன், ஜி.அருள்ராஜா, எ.பாலசுப்ரமணி, கே.சுரேஷ்குமார், கோமதி சங்கர், குருமூர்த்தி, பொறி.எஸ்.ஜெகதீசன் உரையாற்றினர்.