*ஆய்வு செய்த ஆணையாளர் உத்தரவு
திருப்பதி : திருப்பதியில் நடைபெற்று வரும் கலையரங்க பணிகளை பொறியியல் துறை அதிகாரிகளுடன் ஆணையாளர் ேநற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில் வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். திருப்பதி நகர்ப்புற வளர்ச்சிக் கழக அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் ஆர்ட் ஸ்டூடியோ கலையரங்க பணிகளை பொறியியல் துறை அதிகாரிகளுடன் ஆணையாளர் ஹரிதா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கலையரங்க பணிகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும். நிகழ்ச்சியை 600 பேர் பார்க்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடிட்டோரியத்தின் முன் வரிசையில் விஐபிகளுக்கு சிறப்பு இருக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து திறப்பு விழாவுக்குத் தயாராக வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது டி.இ.தேவிகாவுடன் கமிஷனர், பி.என்.ஆர். நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளனர்.