டெல்லி: “நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை”. ஆளுநர்கள் தீர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என குடியரசு துணைத் தலைவர் தன்கர் உள்ளிட்ட பாஜகவினர் பேசுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்தார்.