டெல்லி: தேர்தல் பத்திரங்களை எதிர்த்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்க வழிவகை செய்யும் தேர்தல் பத்திரங்களால் முறைகேடு நடக்க வாய்ப்பு என புகார் தெரிவித்துள்ளனர். வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.