Monday, April 15, 2024
Home » தொகுதிவாரியாக கருத்து கேட்பு தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் மேலிடத்தில் இன்று ஒப்படைப்பு

தொகுதிவாரியாக கருத்து கேட்பு தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் மேலிடத்தில் இன்று ஒப்படைப்பு

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜ சார்பில் யாரை வேட்பாளரை நிறுத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு பட்டியலை தயாரித்து அனுப்பும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பாஜ நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர். தென்சென்னைதொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் கருத்து கேட்டனர்.

மத்திய சென்னையில் மாநில துணை தலைவர் டாக்டர் கனகசபாபதி, முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் கருத்து கேட்டனர். அப்போது பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம் உடன் இருந்தார். வடசென்னை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கருத்து கேட்டனர். இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் கருத்து கேட்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் அரவிந்த் மேனன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோரும், காஞ்சிபுரம் தொகுதியில் எம்.முருகானந்தம், ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோரும் கருத்து கேட்டனர்.

இதன் அடிப்படையில் 3 வேட்பாளர்கள் பெயர் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் மத்திய தேர்தல் குழு இந்த பட்டியலை ஆய்வு செய்து தமிழகத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் இறுதி செய்து அறிவிக்கும். இன்று பாஜவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியலும் இடம் பெறுமா என்று தமிழக பாஜவினரிடையே எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

You may also like

Leave a Comment

15 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi