சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. 2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றால், அதனடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும்; அதனால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தைப் போக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.எனவே, ஒன்றிய அரசும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு விளக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்
0