சென்னை: தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதனை அதிமுக எதிர்க்கும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு குறித்து தெளிவான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்போது தமிழக உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை; பிரதிநிதித்துவம் குறைந்தால் அதிமுக எதிர்க்கும்: எடப்பாடி பழனிசாமி
0