சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் குரலாக பேசுகிறார் பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக இருந்துகொண்டு பாஜகவின் குரலாக பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு பழனிசாமி இன்று வியாக்யானம் பேசுகிறார். பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்க போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஷாவிடம் பேசினாராம். தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் எம்பி இடங்களை குறைப்பதே பாஜகவின் சதித் திட்டம் இவ்வாறு தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் குரலாக பேசுகிறார் பழனிசாமி: ரகுபதி விமர்சனம்
0