மதுரை: தஞ்சையில் முன்னாள் கவுன்சிலரின் கணவரிடம் இருந்து காவலர்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் எடுத்துச் சென்ற மனுதாரரின் ரூ.1.09 லட்சத்தை திரும்ப ஒப்படைக்க ராமநாதபுரம் எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டது. முதுகுளத்துறையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 2023 மே மாதம் தஞ்சை சென்ற தன்னிடம் கடலாடி போலீசார் ரூ.1.14 லட்சத்தை பறித்துக் கொண்டதாக மனுதாரர் புகார் அளித்த நிலையில், ராமநாதபுரம் எஸ்.பி.க்கு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.