Sunday, April 21, 2024
Home » காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: ராகுல்காந்தி வாக்குறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: ராகுல்காந்தி வாக்குறுதி

by Karthik Yash

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவில் இன்றும் ஏன் மூன்றில் ஒரு பெண் மட்டுமே வேலை செய்கிறார், ஏன் 10 அரசு வேலைகளில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருக்கிறார். இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50% இல்லையா? மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் இருப்பு 50% இல்லையா? அப்படியானால், அரசு வேலையில் அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?.

நாட்டை நிர்வகிக்கும் அரசில் பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான வருமானம், எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் பலமாக மாறுவார்கள். 50% அரசுப் பதவிகளில் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும்.

சக்திவாய்ந்த பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள். இந்தியாவின் ஏழ்மையான குடும்பங்களில் இருந்து ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும். ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவுப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும். பெண்களுக்கு கல்வி கற்பதற்கும், அவர்களின் சட்ட உரிமைகளை அமலாக்குவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு சட்டஉதவியாளர் நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண் ஊழியர்கள் தங்க வசதியாக குறைந்தது ஒரு விடுதி அமைக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi