டெல்லி: தகுதி நீக்கத்தை ரத்து செய்து ராகுல் காந்தி எம்.பி.பதவியில் தொடர நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தகுதி நீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளனர்.