ராய்ப்பூர்: சட்டீஸ்கர் சட்ட பேரவை தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது என குமாரி செல்ஜா தெரிவித்தார்.முன்னாள் ஒன்றிய அமைச்சரும் சட்டீஸ்கர் காங்கிரஸ் பொறுப்பாளருமான குமாரி செல்ஜா நேற்று கூறுகையில்,‘‘ சட்டீஸ்கரில் 40 லட்சம் மக்கள் வறுமை நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களின் தேவைகளை அரசு எவ்வாறு பூர்த்தி செய்துள்ளது என்பது உறுதியாகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினைரையும் மேம்படுத்துவதே கட்சியின் நோக்கம் ஆகும். பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 75 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.