சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு துறை கலந்தாய்வு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கிரஸ் விளையாட்டு துறை தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர்கள் மோகன் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கன்னியாகுமரி தொகுதியை விளையாட்டு துறை தத்தெடுத்து அங்கு வேட்பாளர் வெற்றிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.