Saturday, February 24, 2024
Home » பிரதமர் பேரணிக்கு பஸ், கார் வாடகை ரூ.1 கோடி டெபாசிட் செய்ய காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

பிரதமர் பேரணிக்கு பஸ், கார் வாடகை ரூ.1 கோடி டெபாசிட் செய்ய காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

by Ranjith

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 1981 முதல் 1989 வரை பிரதமர்கள் இந்திரா, ராஜிவ்காந்தி பயணம் செய்த போது காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் மற்றும் கார்கள் வாடகைக்கு எடுத்து மக்களை பேரணியாக அழைத்து வந்தனர். இதற்காக தொகையை உபி அரசு போக்குவரத்து கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி செலுத்தவில்லை.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த், கேவி விஸ்வநாதன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 43 வருடத்திற்கு முன்பு நடந்த இந்த பேரணி தொடர்பாக உபி காங்கிரஸ் கட்சி 4 வாரங்களுக்குள் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

You may also like

Leave a Comment

9 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi