பெங்களூரு : காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இன்று பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பெங்களூரு வரவுள்ளார்.