திருவள்ளூர்: இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் மணவாளநகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், திருவள்ளூரில் உள்ள அலுவலகத்தில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். மாநில ஓபிசி அணிச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் அமுதன், வடிவேலு, வி.எம்.தாஸ், மோகன்ராஜ், மனோகரன், சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில் அருள், செந்தில் குமார், ஆர்.குமார், செல்வகுமார், வி.ஆர்.எஸ்.பாபு, பி.பாபு, எஸ்.ஆர்.ராஜன், பாரதி, உமாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் வட்டாரத் தலைவர் ஈகை தேவேந்திரன் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் டி.ஆர்தர் பிராங்கிளின் அர்னால்ட், மாணிக்கம், டேவிட், சுஜித், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.