மும்பை: மும்பையின் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு மகாராஷ்டிரா அரசு வழங்கி யதில் சில விதிமுறைகளை மாற்றியிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு அதானி குழுமம் நேற்று அளித்த பதில் அறிக்கையில், ‘‘தாராவிதிட்டம் குறித்து சர்ச்சையை உருவாக்கும் முயற்சிகள் துரதிஷ்டவசமானவை. ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகள் இத்திட்டத்தை தாமதப்படுத்தும். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை’’ என கூறி உள்ளது.