சென்னை: காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் சையத் இப்ராகிமை பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதவியில் இருந்து நீக்கி தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.