Monday, April 22, 2024
Home » யாருடைய ஆட்சியில் பொருளாதாரம் மேம்பட்டது?: காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் பொருளாதார ஒப்பீடு..!!

யாருடைய ஆட்சியில் பொருளாதாரம் மேம்பட்டது?: காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் பொருளாதார ஒப்பீடு..!!

by Nithya

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியை விட உற்பத்தி, ஏற்றுமதி துறைகள் உள்பட பல்வேறு பொருளாதார தரவுகளில் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மேம்பட்டு இருந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் வெள்ளை அறிக்கை ஒன்றை பாஜக அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக பாஜக ஆட்சியின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மன்மோகன் சிங் மற்றும் மோடி ஆகிய இருவரில் யாருடைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது என்று புள்ளி விவரங்களுடன் ஒப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி 2004-2014 வரையிலான மன்மோகன் சிங் ஆட்சியில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவிய 2008-2009 நீங்கலாக ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி சராசரியாக 8.1% ஆக இருந்தது. ஆனால் 2014-2024 வரையிலான மோடி ஆட்சியில் 2020-2021 கொரோனா பேரிடர் காலகட்டம் சேர்க்காமல் சராசரி ஜிடிபி 7.1% ஆகும்.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உற்பத்தி துறையில் சராசரி வளர்ச்சி விகிதம் 15-17% இருந்த நிலையில், மோடி ஆட்சியில் ஜிடிபியின் உற்பத்தி துறையின் பங்கு 13% ஆக குறைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மூன்றரை மடங்கு அதிகரித்து 80 மில்லியன் டாலரில் இருந்து 300 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஒன்றரை மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது 300 மில்லியன் டாலரில் இருந்து 437 மில்லியன் டாலராக மட்டுமே மோடி ஆட்சியில் ஏற்றுமதி விகிதம் அதிகரித்து உள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சுகாதாரம், கல்வி, தனிநபர் வாழ்க்கை தரம் என முக்கிய அம்சங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் 2004ல் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்திய 131வது இடத்திலும், 2021ல் மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் இந்திய 132வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேவேளையில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 7.9%ஆக இருந்த பணவீக்கம், மோடி ஆட்சி காலத்தில் 4.7%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சி காலம் சில குறிப்பிட்ட அம்சங்களின் பொருளாதார குறியீடுகளில் முன்னிலையில் இருந்தாலும் இன்றியமையாத பொருளாதார செயல்பாட்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலகட்டமே முன்னோடியாக இருந்துள்ளது.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi