சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பிசியோதெரபி மருத்துவ வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையை இன்றைக்கு பெரும்பாலான மக்கள் நாடுகின்ற நிலை உள்ளது. மருத்துவ துறையில் பிசியோதெரபி சிகிச்சை முறை இன்றியமையாததாக இருக்கிறது. உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் இப்பணியில் ஈடுபட்டு வரும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.