அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 188 இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்களை வழங்கி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நேற்று பேசுகையில்,‘‘ காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலைமையிலான அரசாங்கங்களின் தாஜா செய்யும் கொள்கைகளால் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை உரிமைகள் இங்கு மறுக்கப்பட்டன.
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும். முந்தைய அரசுகளின் கொள்கைகளால் தான் 1947ல் இருந்து 2014 வரை இந்தியாவுக்கு அகதிகளாய் வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்து,பவுத்தம்,சீக்கிய அகதிகளுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் குடியுரிமை வழங்கி வருகிறோம் என்றார்.