நெல்லை: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ்2 மாணவர், நேற்று முன்தினம் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது இதே பள்ளியில் பிளஸ்2 படிக்கும் சக மாணவி கிண்டலடித்து, அதை வெட்டிவிட்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரடைந்த மாணவர் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்து மாணவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, தனது உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் 2 பேர் பள்ளிக்குள் நுழைந்து அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்து தாக்கினர். மாணவியிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டு தப்பிச்சென்றனர். புகாரின்படி சேரன்மகாதேவி போலீசார், பள்ளிக்குள் புகுந்து பிளஸ்2 மாணவரை தாக்கிய 2 பேரை தேடி வருகின்றனர்.