சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பி.வேல்துரை மறைவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக, சேரன்மாதேவி தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச்சிறப்பாக பணியாற்றிய பி.வேல்துரை உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளமைப்பருவம் முதல் அயராது பாடுபட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ராஜேஷ்குமார், கே.பி.கே ஜெயக்குமார் தனசிங், சங்கர பாண்டியன் ஆகியோர் நேரடியாக அஞ்சலி செலுத்துவார்கள்.