மதுரை: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி செய்தவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ராகுல் ஷா என்பவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது. கொடைக்கானல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் ஷா ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.