பெரம்பூர்: ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரம்பூர் ரயில் நிலைம் அருகே இன்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திடீரென ரயில் மறியல் செய்ய சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.