ஈரோடு: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றிய புகாரில் ஆலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கழிவறை பீங்கான் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சுற்றுச்சுவர் பகுதி வழியாக திருட்டுத்தனமாக கழிவு நீரை ஆலை வெளியேற்றி வந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.