டெல்லி: நாட்டின் 9 பெரிய நிறுவன பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.1,00,850.96 கோடி உயர்ந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயஸ் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.30,786 கோடி உயர்ந்து ரூ.19,53,480 கோடியாக உயர்ந்தது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.26,668 கோடி அதிகரித்து ரூ.15,15,854 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ.12,323 கோடி அதிகரித்து ரூ.5,82,469.45 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கி சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.9791 கோடி அதிகரித்து ரூ.10,41,053 கோடியாக உயர்ந்துள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன சந்தை மதிப்பு ரூ.9,281 கோடி அதிகரித்து ரூ.5,61,282 கோடியாக உயர்வு உயர்ந்தது. பார்த்தி ஏர்டெல் நிறுவன சந்தை மதிப்பு ரூ.7,128 கோடியும் எஃப்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ.3,953 கோடியும் உயர்ந்துள்ளது. இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ.579 கோடியும் பார்த் ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.402 கோடியும் உயர்ந்தது. எனினும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.28,511 கோடி குறைந்து ரூ.12,24,976 ஆனது.
நாட்டின் 9 பெரிய நிறுவன பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.1,00,850.96 கோடி உயர்வு
0