திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனம் 25 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனிக்கு புறப்பட்டது. திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் 20 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மணவாளநகர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இதனால் திருவள்ளூர் ஸ்ரீ பெரும்புதூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.