குன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் நேற்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சரஸ்வதி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், துணை தலைவர் காயத்ரி அன்புச்செழியன், திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், காட்டாங்குளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், திருப்போரூர் ஒன்றிய குழு துணை தலைவர் சத்யாசேகர், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஆராவமுதன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா,
திருப்போரூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜானகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் படூர் தாரா சுதாகர், கோவளம் சோபனா தங்கம் சுந்தர், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், வெளிச்சை பேபி நித்யகல்யாணம், மறைமலைநகர் நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.சித்ரா கமலக்கண்ணன், லத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி, மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி, வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.