டெல்லி: சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு சலுகைக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்துள்ளது. சமூக அமைப்பில் ஒரு பிரிவு மக்களை பின்தங்கியவர்களாக வைத்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஒப்புதல் அளித்துள்ளார். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களை பற்றி கவலைப்படாததால் 2000 ஆண்டுகளாக அவர்கள் பின்தங்கி உள்ளனர். சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு சமஉரிமை அளிக்கப்படும் வகையில் சிறப்பு நிவாரண ஏற்பாடுகள் அவசியம் என்று அவர் கூறினார்.