சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், லிபரேசன் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் முழுமையான ஆதரவோடு இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகள், பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடும் ஆதரவும் தெரிவிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும் நாடு தழுவிய இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன. அதன்படி வரும் 24ம்தேதி மாலை 4 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மக்கள் திரளாக கலந்து கொள்ள அழைக்கிறோம்.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட்கள் 24ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
0