திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பேரூர்க்கடை அருகே ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கலால்துறையினர் அந்த பகுதியில் உள்ள 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணசந்திரன், ஆலி முகம்மது என்பதும், அவர்கள் 10 கிராம் எம்டிஎம்ஏ வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே அதை கைப்பற்றிய கலால் துறையினர் 2 பேரையும் கைது செய்து, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணசந்திரன் திருவனந்தபுரம் பாளையம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராக உள்ளார்.
எம்டிஎம்ஏ போதைப்பொருள் விற்க முயற்சி கம்யூனிஸ்ட் பிரமுகர் உட்பட 2 பேர் கைது
0