சென்னை : தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சென்னை போரூரில் வசித்து வந்த செந்தில் வேல் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறையில் துணை ஆணையராக உள்ளார். செந்தில்வேலை காணவில்லை என உறவினர்கள் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தேடி வந்த நிலையில், வணிக வரித்துறை அதிகாரி உடல் ஏரியில் மீட்கப்பட்டுள்ளது. செந்தில் வேல் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதும் காரணமா? என போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement


