சென்னை: சென்னை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 46 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை காவல்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஆயுதப்படை உதவி கமிஷனர் குமரன், 2 அமைச்சுப்பணியாளர், 23 எஸ்ஐக்கள், 15 சிறப்பு எஸ்ஐ, ஒரு உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், 2 தூய்மைப்பணியாளர் என மொத்தம் 46 போலீசார் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.
ஓய்வுபெற்ற 46 போலீசாரை தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி கவுரவித்து சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அதேபோல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சையத்ேஷர் அலியை கமிஷனர் அருண் நேரில் அழைத்து நினைவு பரிசு வங்கி கவுரவித்தார்