Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் கூடுதல் காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 46 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், உதவி ஆணையாளர் குமரன் (ஆயுதப்படை-1) 2 கண்காணிப்பாளர்கள் (அமைச்சுப்பணியாளர்), 23 காவல் உதவி ஆய்வாளர்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 1 உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 Data Entry Operator மற்றும் 2 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 46 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இன்று (30.06.2025) பணி ஓய்வு பெறுகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் இன்று (30.06.2025) வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி, சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 30.06.2025ம் தேதி ஓய்வு பெறுகின்ற 46 காவல் துறையினர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

கூடுதல் காவல் ஆணையாளர் ஓய்வு பெறுகின்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வு பெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் D.N.ஹரிகிரண் பிரசாத், (நலன் மற்றும் எஸ்டேட்), சுப்புலட்சுமி, (நிர்வாகம்) காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.