தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குலசேகரகோட்டையை சேர்ந்தவர் பசுபதி மாரி (28). இவர் தமிழக காவல்துறையில் 2017ம் ஆண்டு 2ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடக்கும் கமோண்டோ பயிற்சிக்கு பசுபதி மாரி சென்றிருந்தார்.
பயிற்சியின் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடன் வந்த போலீசார் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். பசுபதி மாரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ளார்.