Monday, March 4, 2024
Home » வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்களும் எண்ணங்களும்

by Kalaivani Saravanan

வண்ணங்களைப் பற்றி சிந்தனை செய்யும் போது ஒளி இருக்கும் போது மட்டுமே எல்லாம் இருப்பதாக தெரியும். ஒளி இல்லாமல் இருக்கும் போது வண்ணம் என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒளியிலே வாழ்ந்து ஒளியை காண முடியாத வாழ்வு எப்படி இருக்கும்? நிச்சயம் வண்ணம் வழிகாட்டும் நிச்சயம் வாழ்வில் ஒளியூட்டும். காலப்புருஷனுக்கு பத்தாம் (10ம்) பாவகமாக இருக்கிறது. இந்த பாவகம் தொழில், உத்தியோகம், கர்மஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ராசியின் அதிபதியான சனி பகவானாக இருக்கிறார். இவரே கர்மத்திற்கான அளவீடுகளுக்கு ஏற்றவாறு தண்டனை வழங்குகிறார். சனி பகவானுக்கு ஏற்ற நிறம் கருநீலமாகும். மகரம், கும்பம் ராசிக்காரர்களை சனி பகவான் தண்டிக்க மாட்டார் எனச் சொல்வார்கள். அப்படியெல்லாம் யாரையும் பிரித்து பார்க்கும் குணம் சனி பகவானுக்கு இருப்பதில்லை. தர்மத்திற்காக ஈஸ்வரனையே பிடித்து ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்.

இந்த ராசிக்காரர்கள் அதிக உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதில் சிறு சந்தேகமும் வேண்டாம். சனி பகவான் ராசிக்குள் வந்து மீனத்தை அடையும் காலம் வரை நீலநிறம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். பின்பு, அதற்கான வண்ணத்தை அதிகம் பயன்படுத்துங்கள். இரண்டாம் அதிபதியாகவும் ராசியின் அதிபதியாகவும் இருப்பதால், தர்மமான முறையில் பொருள் ஈட்டுவது சாலச் சிறந்தது.

மற்றவர்களை ஏமாற்றியோ அல்லது மற்றவர்களின் உழைப்பில் நீங்கள் இருப்பீர்கள் எனில் உங்களுக்கான துன்பத்தை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மூன்றாம் அதிபதியாகவும், பன்னிரண்டாம் அதிபதியாகவும் வியாழன் வருகிறார். வியாழன் உங்களுக்கு முயற்சியையும், சுபச்செலவுகளையும் தருகிறார். ஆகவே, உறவுகள் வருவதும் செலவுகள் இருப்பதும் இயற்கையாக உண்டாகும்.

மஞ்சள் நிறத்தை தேவையான காலகட்டங்களில் மட்டும் பயன்படுத்துவது சிறப்பைத் தரும். மகரராசிக்கு நான்காம் அதிபதியாகவும் (4ம்) பதினோராம் அதிபதியாகவும் (11ம்) செவ்வாய் வருகிறார். வீடு மற்றும் வெற்றிக்கான புதிய முயற்சிகளை செய்யும் போது சிவப்பு நிறத்தை பயன்படுத்துங்கள். கோட்சாரத்தில் நான்காம் வீட்டிலோ பதினோராம் வீட்டிலோ செவ்வாய் சஞ்சரிக்கும் போது சிறப்பான பலன்கள் உண்டு.

உங்களுக்கு ஆறாம் அதிபதியாகவும் (6ம்) ஒன்பதாம் அதிபதியாகவும் மிதுனம் மற்றும் கன்னி வீடுகள் வருகின்றன. இதன் அதிபதி புதன் ஆவார். அவருக்குரிய வண்ணம் பச்சை. முடிந்தளவு பச்சையைத் தவிர்த்து விடுங்கள். ஏழாம் அதிபதியாக சந்திரன் வருகிறார். வியாபாரம், முக்கிய நபர்களை சந்திக்கும் காலத்திலும் நண்பர்களை சந்திக்கும் காலத்திலும் வெண்மை நிறத்தை பயன்படுத்துங்கள் சிறப்பான பலன்கள் உண்டு. மகரத்திற்கு அஷ்டமாதிபதியாக (8ம்) சூரியன் வருவதால், ஆரஞ்சு வண்ணத்தை தவிர்த்துவிடுங்கள்.

உங்களுக்கு ஐந்தாம் அதிபதியாக (5ம்) சுக்ரன் வருகிறார். அதே போல, பத்தாம் அதிபதியாகவும் சுக்ரன் வருகிறார். இளஞ்சிவப்பு நிறத்தை (பிங்க்) தொழில் தொடர்பாக பயன்படுத்தும்போது, நல்ல முன்னேற்றம் உண்டு. சனி பகவானுக்கும் நட்புக் கிரகமாக சுக்ரன் இருப்பதால், பிங்க் வண்ணம் நன்மை செய்யும்.

கோட்சார கிரகங்களின் தொடர்பில் இருப்பதைக் கொண்டு சாதகமான வண்ணங்களைப் பயன்படுத்தும்போது, நமக்கும் சாதகமான பலன்கள் உண்டு. நிறைய உணவு தானம் செய்யும் பொழுது உங்களின் மனசஞ்சலம் விலகும். துன்பங்கள் தூரப்போகும் என்பதை நினைவில் கொள்ளங்கள். வண்ணங்கள் நல்ல எண்ணங்களை நமக்கு தரட்டும். நல்ல எண்ணங்கள் நமக்கு நல்ல செயல்களை விதைக்கட்டும்.

தொகுப்பு: சிவகணேசன்

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi