பொகாடோ: தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு ேம 31ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , பழமைவாத ஜனநாயக கட்சி சார்பில் மிகுவல் யூரிப் டர்பே போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் பொகோட்டோவின் பான்டியன் பகுதியில் உள்ள ஒருபூங்காவில் ஆதரவாளர்களிடையே மிகுவல் யூரிப் டார்பே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மிகுவல் யூரிப்பை அவரது ஆதரவாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை வௌியிட்டுள்ள அறிக்கையில், “தலையில் படுகாயமடைந்துள்ள யூரிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. “உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மிகுவல் யூரிப் டார்பே நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அவரது மனைவி மரியா கிளாடியா டராசோனா மிகுந்த கவலையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுவல் யூரிப் டர்பே, கடந்த 1991ம் ஆண்டு கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட டயானா டர்பே என்ற பத்திரிகையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.