திருவள்ளூர்: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா ஆலோசனையின் பேரில் அகத்தர மதிப்பீட்டுக்குழு மற்றும் உளவியல் துறை இணைந்து தொடர்ச்சியான தொழில்துறை மேம்பாடு குறித்து ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. இதில் கல்லூரி இயக்குனர் சாய் சத்தியவதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சியில் கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் பிரபு சங்கர், எஸ்.டி.என்.பி. வைணவக் கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கரோல் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் நுண்ணறிவினைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பங்கேற்ற பேராசிரியர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு, திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேலும் மெருகூட்டினர்.