சூலூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மொகவனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் நகுல் பிரணேஷ் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு காரில் உடுமலையில் இருந்து செஞ்சேரிமலைக்கு வந்து கொண்டிருந்தார். மந்திர கிரி வேலாயுதசுவாமி கோயில் கிரிவல பாதை அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கண்ணம்மாள் (70), என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. இதில், கண்ணம்மாள் படுகாயம் அடைந்தார். காரை ஓட்டி வந்து கல்லூரி மாணவர் நகுல் பிரணேஷ் உயிரிழந்தார்.
வீட்டிற்குள் கார் புகுந்து கல்லூரி மாணவர் பலி
0
previous post