சேலம் : சேலம் அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு வல்லுநர்கள் மூலம் தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது.
சர்வதேச தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு,சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் விஜயகுமார், பிச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகத்துறை தலைவர் சுகவனேஸ்வரி வரவேற்றார். இதில், பிரபல தொழில் வல்லுநர்களான மரியா ஷாலினி, எலிஜா மற்றும் கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் வேலை தேடுவோராக மட்டும் அல்லாமல், வேலை அளிக்கும் ெதாழில் முனைவோராகவும் விளங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் தொழில் தொடங்குவதற்கான மனநலன், யுக்திகள், கடன் பெறும் வழிமுறைகள், அரசின் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர். சேலம் அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, வரும் 30ம் தேதி வரை முழக்கம் எழுதும் போட்டி, சின்னம் தயாரித்தல், கட்டுரை எழுதுதல் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது.