பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1.38 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ1.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (28ம்தேதி) நேரில் சென்று பார்வையி ட்டு ஆய்வுசெய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வே ப்பந்தட்டை ஒன்றியம், தொ ண்டமாந்துறை ஊராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்டு வரும் தானியங்கி கிடங்கு, ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல ரூ.68.18 லட்சம் மதிப்பீட்டில் முஹம்மது பட்டிணம் முதல் கிருஷ்ணாபுரம் வரை செல் லும் 840 மீ நீள தார்ச்சாலை பணி, ரூ.11.33 லட்சம் மதிப் பீட்டில் முஹம்மதுபட்டிணம் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் முடிவு ற்ற பணி, ரூ1.14லட் சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்த பணி, ரூ.89 ஆயிரம் மதிப்பீட் டில் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளி கழிவறை பழு து நீக்கம் செய்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) செல்வமணியன், தாசில்தார் சரவணன், இளநிலை பொறியாளர் சேவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.