காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் விப்பேடு ஊராட்சி குண்டுகுளத்தில், 58 பழங்குடியின மக்களுக்காக ரூ.268.54 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புகள் கட்டும் பணி மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு செல்வதற்காக, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டும் பணியினை நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, வளத்தோட்டம் ஊராட்சியில் ரூ.65.49 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள வளத்தோட்டம் காலனி, களக்காட்டூர் கால்வாய் ரோட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, உத்திரமேரூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வளத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் கலைந்துரையாடி, கற்றல் திறனை ஆய்வு செய்து, அனைவருக்கு இனிப்புகளை வழங்கினார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.