Friday, April 12, 2024
Home » 10 வருடங்களாக கலெக்டராக இருந்ததால் மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பேன்: காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

10 வருடங்களாக கலெக்டராக இருந்ததால் மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பேன்: காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

by Karthik Yash

திருவள்ளூர்: 10 வருடங்களாக கலெக்டராக இருந்ததால் மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பேன் என்று திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உறுதியளித்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இந்நிலையில் திருவள்ளூரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், அஸ்வின்குமார், தளபதி மூர்த்தி, வழக்கறிஞர் சசிகுமார், ரமேஷ், மணவாளன், திவாகர், வழக்கறிஞர் ரமேஷ், திவாகர் சுயம்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர, வட்டார தலைவர்கள் ஜோஷி பிரேம் ஆனந்த், பழனி, முகுந்தன், சதீஷ், வினோத், ராஜேஷ், பாலாஜி, கலை, பிரதாப் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசும்போது, நான் சென்னையில் பிறந்தாலும் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில்தான் வளர்ந்தேன். ஆகையால் எனக்கு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நன்கு அறிமுகம். நான் ஐஏஎஸ் முடித்த பின்னர் கர்நாடகாவில் 3 மாவட்டங்களில் 10 வருடங்களாக கலெக்டராக பணிபுரிந்துள்ளேன். அங்கிருந்த அரசியல் சூழ்நிலை பிடிக்காமல் பணியிலிருந்து விலகினேன். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றுகிறேன். நாம் இதுவரை வாழ்ந்து வந்த வளர்ச்சியை பாஜ அரசு பின்னோக்கி கொண்டு செல்கிறது. குறிப்பாக கல்வியில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் பாஜ அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. இதே நிலை நீடித்தால் கல்வி 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, திருவள்ளூர் தொகுதி எனக்கு நன்கு அறிமுகமான தொகுதி. ஆகையால் இந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டு காலத்தில் இந்த தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சியடையச் செய்வேன். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்ததால் தொகுதி மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பேன். திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து, எப்படி பெற வேண்டும் என்ற வழிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவேன். மேலும் கடந்த 5 ஆண்டு காலத்தில் எம்பியாக இருந்த ஜெயக்குமார் பல திட்டங்களை இங்கு செயல்படுத்தியுள்ளார். அதில் பாதியில் விடப்பட்டுள்ள பணிகளை சீராக முடிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதையும் நிறைவேற்றுவேன் இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

13 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi