மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட தலைவர் சி.குமார் கூறுகையில், தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் சேர்க்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை மாநிலம் முழுவதும் ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 27ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான பெருந்திரல் இயக்கம் நடத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலர்கள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.